search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லோக் ஆயுக்தா"

    • பி.டி.ஓ. உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் உள்ள 16 அதிகாரிகளின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.
    • கைதான டிரைவர் நாகராஜ், ஏட்டு கங்கஹனுமையா ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெங்களூரு:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி கர்நாடக மாநிலத்தில் வாக்காளர்களுக்கு பணம் வழங்க பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்பதை கண்டுபிடிக்கும் நோக்கில் ஊழல் தடுப்பு அமைப்பான லோக் ஆயுக்தா குழுவினர் இன்று காலை மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் அலுவலகங்கள், வீடுகள் உள்பட 60 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள். 100-க்கும் மேற்பட்ட லோக் ஆயுக்தா அதிகாரிகள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனைக்கு 13 சூப்பிரண்டுகள், 12 துணை சூப்பிரண்டுகள் தலைமை தாங்கி உள்ளனர்.

    இதில் பி.டி.ஓ. உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் உள்ள 16 அதிகாரிகளின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. அதுபோல் பெங்களூரு ஆர்.எம்.சி. யார்டில் போலீஸ் உதவி கமிஷனர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் பீன்யா போலீஸ் நிலையம் உள்ளது. அதே பகுதியை சேர்ந்த சேத்தன் என்பவர் கியாஸ் சிலிண்டர் விநியோகம் செய்ய போலீஸ் நிலையத்தில் அனுமதி கேட்டார். அதற்கு போலீசார் 2 லட்சம் ரூபாய் லஞ்சம் தருமாறு அவரிடம் கேட்டனர்.

    இதையடுத்து பெங்களூரு ஆர்.எம்.சி. யார்டில் போலீஸ் உதவி கமிஷனர் அலுவலகத்தில் வைத்து உதவி கமிஷனர் ஜீப் டிரைவர் நாகராஜ், ஏட்டு கங்கஹனுமையா ஆகியோர் சேத்தனிடம் இருந்து முன்பணமாக ரூ.50,000 வாங்கினார்கள். அப்போது அங்கு மறைந்திருந்த லோக் ஆயுக்தா இன்ஸ்பெக்டர் விஜய கிருஷ்ணா தலைமையிலான போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். கைதான டிரைவர் நாகராஜ், ஏட்டு கங்கஹனுமையா ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோலார் மாவட்டம் பங்கராபேட் தாலுகாவின் ஜே.குல்லஹள்ளி கிராம பஞ்சாயத்தில் பஞ்சாயத்து செயலாளர் கோவிந்தப்பா குல்லஹள்ளி கிராமத்தை சேர்ந்த முனியப்பா என்பவரிடம் பஞ்சாயத்தில் கணக்கு தொடங்க ரூ. 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார். முனியப்பா முதலில் ரூ.3 ஆயிரம் லஞ்சம் கொடுத்த அவர் மீதி பணம் ரூ.2 ஆயிரத்தை கோவிந்தப்பாவிடம் கொடுத்துக் கொண்டிருந்தபோது லோக் ஆயுக்தா போலீஸ் சூப்பிரண்டு உமேஷ் தலைமையிலான போலீசார் அவரை கைது செய்தனர்.

    இதேபோல் பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்ட பள்ளாப்பூர் தாலுகா அலுவலகத்தில் நில அளவையாளர் வீரண்ணா விவசாயியிடம் ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கும்போது லோக் ஆயுக்தா வலையில் சிக்கினார். 3 ஏக்கர் நிலத்தை அளவீடு செய்வதற்காக விவசாயியிடம் லஞ்சம் வாங்கும்போது அவர் பிடிபட்டார். அப்போது அங்கு இருந்த இடைத்தரகர் சதீஷ் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

    பெங்களூரு, உத்தர கன்னடா, பிதர், ராமநகரா, கார்வார், சன்னபட்னா உள்ளிட்ட 60 இடங்களில் லோக்ஆயுக்தா அதிகாரிகள் நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம், ஆவணங்கள், சட்ட விரோதமாக வாங்கப்பட்ட சொத்துக்கள் தற்போது சரிபார்க்கப்பட்டு வருகிறது.

    • கர்நாடகாவில் இன்று அதிகாலை முதல் 40 இடங்களில் லோக் ஆயுக்தா போலீார் சோதனை நடத்தி வருகின்றனர்.
    • சோதனை நடந்து வரும் இடங்களுக்கு முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடகா மாநிலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பல்வேறு துறைகளைச் சேர்ந்த 10 அதிகாரிகள் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் லோக் ஆயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்நிலையில், இன்று அதிகாலை முதல் 10 மாவட்டங்களில் 40 இடங்களில் லோக் ஆயுக்தா போலீார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    கர்நாடக ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழக பொறியாளர் அனுமந்தராயப்பா, பொதுப்பணித்துறை மாண்டியா கோட்ட பொறியாளர் ஹர்ஷா, சிக்மகளூர் வணிகவரி அலுவலர் நேத்ராவதி, ஹாசன், உணவு ஆய்வாளர் ஜெகநாத் ஜி கொப்பல், வனத்துறை அலுவலர் ரேணுகாமா, சாம்ராஜ்நகர் ஊரக குடிநீர் வழங்கல் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர் ரவி, மைசூர் நகர்ப்புற வளர்ச்சி ஆணை அலுவலர் யக்ஞேனந்திரா, பெல்லாரி உதவி பேராசிரியர் ரவி, விஜயநகர மாவட்ட எரிசக்தி துறை அதிகாரி பாஸ்கர், மங்களூரு மெஸ்தாம் அதிகாரி சாந்தகுமார் ஆகியோருக்கு தொடர்புடைய 40 இடங்களில் இந்த சோதனை நடந்துவருகிறது என லோக் ஆயுக்தா வட்டாரங்கள் தெரிவித்தன.

    குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களது உறவினர்கள், பினாமிகள் என சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள், பண்ணை வீடுகள், வணிக வளாகங்களில் இந்த அதிரடி சோதனை நடந்து வருகிறது.

    லோக் ஆயுக்தா போலீசார் 40 இடங்களில் நடத்தி வரும் சோதனையால் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சோதனை நடந்து வரும் இடங்களுக்கு முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து அனைவரது பார்வையையும் பெற்றவர் அன்னா ஹசாரே.
    • லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர முக்கிய காரணமாக இருந்தவர் என்றால் மிகையாகாது.

    மகாராஷ்டிர மாநிலத்தில் ஏக் நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சி பா.ஜனதா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி செய்து வருகிறது.

    மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத்தில் இரு அவைகள் உள்ளன. மக்களால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களை கொண்ட சபை ஒன்று. மற்றொரு மேல்சபை. மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டசபையில் ஏற்கனவே லோக் ஆயுக்தா மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டு விட்டது.

    இந்த நிலையில் நேற்று மேல்சபையில் இந்த மசோதா நிறைவேறியது. இதனைத் தொடர்ந்து மகாராஷ்டிர மாநில முதல்வர் ஏக் நாத் ஷிண்டே சமூக ஆர்வலரும், ஊழலுக்கு எதிராக போராடியவருமான அன்னா ஹசாராவை போன் மூலம் தொடர்பு கொண்டு, இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

    லோக் ஆயுக்தா வரம்பிற்குள் முதலமைச்சர் மற்றும் மந்திரிகள் அடங்குவர். லோக் ஆயுக்தா அதிகாரி ஒருவரை நியமித்தபின் அவரை மாற்றவோ இடமாற்றமோ செய்ய முடியது. சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிதான் நீக்க முடியும்.

    அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு எதிரான ஊழல் குறித்த புகார்களை விரைவாக விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ள இந்த அமைப்பு தொடங்கப்பட்டது.

    மத்திய அரசு லோக் ஆயுக்தா மசோதாவை அமல்படுத்த அன்னா ஹசாரே நீண்ட நாட்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டார். காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியை இழக்க இவரது போராட்டம் ஒரு முக்கிய காரணம் என்றால் அது மிகையாகாது. மேலும், இவருடன் உண்ணாவிரதம் இருந்து கெஜ்ரிவால் தனியாக சென்று கட்சி ஆரம்பித்து டெல்லி முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளார். பஞ்சாப் மாநிலத்திலும் கெஜ்ரிவாலிடம் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பிடித்துள்ளது.

    • வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தததாக அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.
    • தாசில்தாரின் வீட்டில் இருந்து சொத்துக்கள் தொடர்பான பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

    விஜயபுரா:

    கர்நாடக மாநிலம் விஜயபுரா மற்றும் பாகல்கோட் மாவட்டங்களில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ள அரசு அதிகாரிகளின் வீடுகளில், லோக் ஆயுக்தாவின் லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல்துறையினர் இன்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 20 அதிகாரிகள் தனித்தனி குழுக்களாக பிரிந்து 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    இதில் கே.ஆர்.புரா தாசில்தார் அஜித் ராய் என்பவரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.10 லட்சம் பணம் கட்டுக்கட்டாக வைத்திருந்தது தெரியவந்தது. அந்த பணத்தை அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும், சொத்துக்கள் தொடர்பான பல்வேறு ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தததாக அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.

    கர்நாடக மாநிலத்தில் அரசு ஊழியர்கள் ஊழல் செய்வதை தடுக்கும் நோக்கில் லோக் ஆயுக்தாவின் லஞ்ச ஒழிப்புத்துறை இயங்கி வருகிறது. 

    முதல்வர், அமைச்சர் ஆகியோர்களை விசாரணை வரம்புக்குள் கொண்டு வரும் லோக் ஆயுக்தா மசோதா விரைவில் தாக்கல் செய்யப்படும் என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சட்டசபையில் இன்று தெரிவித்துள்ளார். #Lokayukta #TNAssembly
    சென்னை:

    தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. இதில், சம்பந்தப்பட்ட மாநிலங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலர்கள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    தமிழக அரசு சார்பில் கடந்த ஏப்ரலில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. ‘லோக் ஆயுக்தா, லோக்பால் தொடர்பாக மத்திய அரசு சில சட்டத் திருத்தங்கள் கொண்டுவர உள்ளதால், அதைத் தொடர்ந்து லோக் ஆயுக்தா அமைக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டது.

    இதை நிராகரித்த சுப்ரீம் கோர்ட், உடனடியாக லோக் ஆயுக்தாவை அமைக்க உத்தரவிட்டது. மேலும், தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஜூலை 10-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் தமிழக தலைமைச் செயலருக்கு உத்தரவிட்டது.

    இதனால், இந்த சட்டசபை கூட்டத்தொடரில் லோக் ஆயுக்தா மசோதா தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கான பணிகள் நடந்து வருவதாக அதிகாரிகள் கூறினர். இன்னும், 2 நாட்கள் மட்டுமே கூட்டத்தொடர் நடக்கும் என்பதால் இன்று மசோதா தாக்கல் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியானது. 

    இந்நிலையில், இன்று இது தொடர்பாக பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், லோக் ஆயுக்தா மசோதா விரைவில் தாக்கல் செய்யப்படும் என்றார். இதனால், நாளை மசோதா தாக்கல் செய்ய வாய்ப்புகள் அதிகம் உள்ளன. 
    ×